siragadikka aasai actress preetha reddy :தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது அதேபோல் சீரியலில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வருவது சன் தொலைக்காட்சி தான். அடுத்ததாக விஜய் தொலைக்காட்சி பல சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து வருகிறார்கள்.
சினிமா முதல் சீரியல் நடிகை வரை அனைவரும் நடிக்க வருவதற்கு முன்பு சந்தித்துள்ள பிரச்சனைதான் அட்ஜஸ்மென்ட் இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பி உள்ளார்கள். அதிலும் சமீப காலமாக பேட்டியில் கசப்பான சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு பல நடிகைகள் மிகவும் போல்டாக தங்களுக்கு நடந்த இன்னல்களை கூறி வருகிறார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் மதிய நேரங்களில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் ரசிகர்கள் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். அதோடு சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தங்களுடைய அன்பையும் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பி வருகிறார்கள்.
சற்றும் எதிர்பாராத வகையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா முத்து இருவரையும் மையப்படுத்தி கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முத்துவின் தம்பியாக வரும் ரவியின் தோழியாக தான் நடிகை ப்ரீத்தா ரெட்டி நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார் இதற்கு முன்பு ப்ரீத்தா ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த இனியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் பட வாய்ப்புக்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் என்னிடம் பலர் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்கள் என வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் ஆடிஷன் சென்று தேர்வான பிறகு கையெழுத்து போடும்பொழுது சில நிபந்தனங்களை கூறுவார்கள்.
அது என்ன நிபந்தனை என்றால் பட வாய்ப்பு வேண்டுமென்றால் இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வார்கள் அதனால் அனைத்து பட வாய்ப்பையும் உதறி தள்ளியுள்ளேன் இதை தான் செய்ய வேண்டும் அப்போதுதான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும் அதற்கு அதையே தொழிலா செய்திட்டு போகலாமே இது போன்ற பிரச்சனைகளால் சினிமாவை விட்டு வந்து விட்டேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ஒரு படத்திற்கு ஆடிஷன் மூலம் தேர்வானா பிறகு தயாரிப்பாளர் தன்னிடம் நேரடியாகவே என்னிடம் கேட்டார் யாரோ ஒருவர் மூலம் கேட்கப்பட்டதை அறிந்திருக்கிறேன் ஆனால் இப்படி நேரடியாக கேட்டது எனக்கு தூக்கி வாரி போட்டது என ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார்.