Siragadikka Aasai : விஜய் டிவியில் இரவு நேரத்தில் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வருகின்றன.. இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் மக்களுக்கு பரிச்சயமானவர்களை ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலை தொடர்ந்து பலரும் பார்த்து வருகின்றனர்.
மேலும் டிஆர்பி யிலும் முக்கிய பங்கு வகிக்கிறது தற்பொழுது இந்தத் தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன ஏனென்றால் விஜயா தன் வீட்டில் உள்ள சிலரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வட்டிக்கு வாங்கின விஷயத்தை தெரியாமல் வைத்திருந்தார்.. வட்டிகட்ட போன இடத்தில் பணத்தை தொலைத்து விட்டேன் என்று சொல்ல பைனான்சியர் விஜயாவை ஒரு ரூமில் வைத்து பூட்டி விட்டார்.
இதைப் பார்த்த மீனா உடனே வீட்டில் உள்ள எல்லோருக்கும் போன் பண்ணி சொல்லி வர வைத்து பிரச்சனையாகிய பின்பு முத்து மனோஜ் போன்ற எல்லோரும் கடன் வாங்கியதற்கு கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விஜயாவிடம் ஏன் கடன் வாங்கின என்று கேட்க..
ரோகினி பார்லர் வைக்க தான் கடன் வாங்கினேன் என்ற உண்மையையும் சொல்லிவிட்டார் அதனால் எல்லோரும் விஜயா மேல் செம்ம கோவத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்..
அதன்படி விஜயா ரூ 8000, அண்ணாமலை ரூ 8000, முத்து ரூ 12,000, மீனா ரூ 12,000, மனோஜ் ரூ 6000, ரோகிணி ரூ 6000, ரவி ரூ 5000, ஸ்ருதி ரூ 5000 மேலும் சீதா மற்றும் சத்யா இருவரும் இரண்டு எபிசோடுக்கு 3000 என வாங்குகின்றனர்.