சீதாவின் விபரீத முடிவால் பிரச்சனையில் சிக்குவாரா மீனா… அடுத்தடுத்த அரங்கேற போகும் பரபரப்பான சம்பவங்கள் – சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai 9th to 14th October
Siragadikka Aasai 9th to 14th October

Siragadikka Aasai 9th to 14th October : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடில் மீனாவை அழைத்துக் கொண்டு முத்து மாமியாரிடம் தாம்பூலத்தில் பழம், தேங்காய் பூ அனைத்தையும் வைத்து ரவிக்கு உங்க பொண்ணு சீதாவை கொடுங்கள் என கேட்க அதற்கு மீனாவின் அம்மா மூத்த பொண்ண அங்கு வந்து இவ்வளவு கஷ்டப்படுற சின்ன பொண்ணையும் அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் உங்க அம்மா தப்பா பேசுவாங்க அதெல்லாம் சரிப்பட்டு வராது மாப்பிள்ளை என கூறிவிடுகிறார்.

ஆனால் முத்து என் வார்த்தைக்கு இவ்வளவுதான் மரியாதை இந்த வீட்ல நான் சொன்னா நீங்க கேட்பீங்க என்று நினைத்து வந்தேன் பரவாயில்லை என கிளம்புகிறார் போற வழியில் ரவியும் நல்ல பையனாவும் நல்ல பொண்ணு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டா நல்லா தான் இருப்பாங்க என மீனா சொல்லுகிறார். மற்றொரு பக்கம் சுருதி அவங்க அப்பா அம்மாவிடம் எனக்கு இப்பொழுது கல்யாணம் வேணாம் கொஞ்ச நாள் தள்ளி வைக்க வேண்டும் என கூறுகிறார். கொஞ்சநாள் தள்ளி போட்டா நீ நெனச்சத முடிச்சிடலாம் பாக்குறியா அது மட்டும் கனவுல கூட நடக்காது என்பது போல் கூறுகிறார்கள் ஒழுங்கா மாப்பிள்ளையோட ஷாப்பிங் போயிட்டு வா என சொல்லுகிறார்கள்.

மற்றொரு பக்கம் முத்து ரவியிடம் ஒழுங்கா ரெஸ்டாரண்டுக்கு போய் வேலையை செய்யறது மட்டும் பாரு அந்த பொண்ணு கூட பேசுற வேலைய வச்சுக்காத எனக் கூறுகிறார் சுருதி ரவிக்கு போன் பண்ணுகிறார் ஆனால் ரவி அந்த போனை அட்டென்ட் பண்ணவில்லை அதனால் ஸ்ருதி நேராக வேலை செய்யும் இடத்திற்கு வந்து அந்தப் அந்த மாப்பிள்ளை பையன் கூட நாளைக்கு பர்ச்சேஸ்க்கு போக சொல்றாங்க நீ போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் என ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து விடுகிறார்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோ ரவியின் அப்பாவிடம் ஸ்ருதியின் அப்பா என்னுடைய மகளுக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து ஃபிக்ஸ் பண்ணியாச்சு உங்க பையன் இனிமே என் பொண்ணு கிட்ட பேச கூடாது என கூறி விடுகிறார். உடனே முத்து அந்த ஆள் என்ன பண்ணுவார் நான் பாத்துக்குறேன் என பேச ரவி நம்மள மீறி எதுவும் பண்ண மாட்டான்ப்பா அத நான் பாத்துக்குறேன் அப்பாவிடம் வாக்கு கொடுக்கிறார் முத்து.

கல்யாணத்துக்கு ரிஜிஸ்டர் ஆபிசில் பேசிட்டேன் ஸ்ருதிக்கு நான் சைன் பண்ணுகிறேன் உனக்கு என கேட்க நான் எனக்கு முக்கியமான ஆள கூட்டிக்கொண்டு வருகிறேன் என கூறுகிறார் ரவி அது மட்டுமில்லாமல் மாலையை நானே கட்டி எடுத்துக் கொண்டு வருகிறேன் என சீதா கூறிவிடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.