வீட்டுக்குள் விடாமல் மீனாவை துரத்தி அடித்த முத்து.. ரிலீசான அண்ணாமலை – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai promo
Siragadikka Aasai promo

Siragadikka Aasai promo : சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.. அதனால் ஸ்ருதியை காணும் என்று வாசுதேவன் மற்றும் சுதா போலீசில் கம்பளைண்ட் கொடுக்க போலிஸ் அண்ணாமலையை வீடு தேடி வந்து அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் வைத்திருக்கின்றனர்.

இது தெரிந்து முத்துவும் பதறி போய் ஸ்டேஷனுக்கு வந்து அப்பாவை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சாட்சி கையெழுத்து போட்டு இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தது மீனா தான் என்று தெரிந்தவுடன் முத்து மீனாவை கன்னத்தில் அறைந்து என் மூஞ்சிலேயே முழிக்காத எனக்கு துரோகம் பண்ணிட்ட இல்ல என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு நூல் பிச்சுகிச்சுன்னா மொத்த மானமும் கப்பலேறிடும்.! வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்

மேலும் போலீஸ் ரவி வந்தா தான் அண்ணாமலை விடுவேன் என்று சொல்கிறார்.. இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான சிறகடிக்க ஆசை ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் மீனா ரவிக்கு போன் பண்ணி உன்னை இங்க எப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும் நான் செத்தா கடைசியா என்ன பாக்க வருவில்ல நான் சாகப் போறேன் என்று சொல்ல ரவியும் ஸ்ருதியும் உடனே கிளம்பி ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.

ரவியை பார்த்ததும் முத்து கோபத்தில் அடித்துக் கொண்டிருக்கிறார் பிறகு போலீஸ் ரவியை பார்த்து இவன் மேல எஃப் ஐ ஆர் போட்டு உள்ள தள்ளுங்க என்று சொல்ல ஸ்ருதி நாங்க மேஜர் எங்க வாழ்க்கையில முடிவெடுக்க எங்களுக்கு உரிமை இருக்கு, சட்டப்படி நாங்க கல்யாணம் பண்ணி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி இருக்கோம் அதனால நான் எங்க அப்பா அம்மா கூட போக மாட்டேன் ரவி கூட தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார்.

தமிழுக்கு வில்லியாக களமிறங்கிய மேக்னா.! நடு நடுங்கி நிற்கும் தமிழ், நமச்சி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பிறகு போலீஸ் அண்ணாமலையை விடுவித்து எல்லோரையும் போங்க என்று சொல்கிறார். அடுத்து ரவி அண்ணாமலையை பார்த்து அப்பா என்று சொல்ல அண்ணாமலை கையை உதறித் தள்ளுகிறார்.. அதேபோல் முத்துவும் மீனாவிடம் நீ எங்க வர அவங்களுக்கு சொன்னது தான் உனக்கும் ஒழுங்கா இப்படியே எங்கேயாவது போயிடு என்று சொல்ல மீனா தனியாக அழுது கொண்டு நிற்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது..