விஜயா ரொம்ப கொடுமை படுத்துவாங்க.. என் பெண்ணை அனுப்ப முடியாது பரசுவின் பேச்சால் முத்து வீட்டில் வெடித்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai September 30
Siragadikka Aasai September 30

Siragadikaa Aasai September 30 :  இன்றைய எபிசோடில் பரசு வீட்டிற்கு முத்து ரவிக்காக பொண்ணு கேட்டு போயிருந்தார்.. அங்கு நடந்தவற்றை அப்படியே வீட்டில் வந்து பேசி காண்பிக்கிறார்.. பரசு சொல்லியது உங்க அப்பா அண்ணாமலை ரொம்ப நல்லவரு அவர்கிட்ட சம்மந்தம் வசிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்..

ஆனால் உங்க அம்மா இருக்கிற வீட்டுக்கு என் பொண்ணு அனுப்ப எனக்கு விருப்பமில்லை, நாங்க ஏழை தான் இருந்தாலும் என் பொண்ணை எப்படியோ கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கேன், மீனா எவ்வளவு நல்ல பொண்ணு அவளையே உங்க அம்மா இவ்வளவு கொடுமை படுத்துறாங்க, என் பொண்ண எல்லாம் அங்க அனுப்பி வைக்க முடியாது என தெளிவாக சொல்லிவிட்டார்.

இதனை வீட்டில் சொன்னால் விஜயா நம்ப மாட்டார் என்பதற்காக முத்து அதனை ரெக்கார்ட் பண்ணி வீட்டில் உள்ள எல்லோரிடமும் போட்டு காண்பிக்கிறார்.. இதைக் கேட்டு விஜயா நான் என்ன அப்படி மீனாவ கொடும படுத்தின, என்று கேட்டு சண்டை வளத்துகிறார்.

பிறகு அண்ணாமலை நல்ல சம்பந்தம் நம்ம கையை விட்டு போயிடுச்சு என்ன பண்றது எல்லாம் இந்த விஜயவாள என்று சொல்லிட்டு, நான் பரசு ஓட பொண்ண முத்துவுக்கே கேட்கலாம் என்று நினைத்தேன் என்று சொல்ல.. அப்படியா அப்பா மனோஜ் அந்த கல்யாணத்தை விட்டு ஓடவில்லை என்றால் நான் பரசு ஓட பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பனா அப்பா என்று சொல்ல மீனா இதைக் கேட்ட வருத்தப்படுகிறார்.

உடனே முத்து பரவாயில்லப்பா பரசு மாமாவோட பொண்ண கல்யாணம் பண்ணி இருந்தா மீனா கையால மீன் குழம்பு சாப்பிட்டு இருக்க முடியாது, மீனா வைக்கிற மீன் குழம்பு அவ்வளவு சூப்பரா இருக்கும் என்று சொல்கிறார்.. பிறகு ரூமுக்கு போனதும் மீனா முத்துவிடம் நான் நல்லா சமைப்பாங்கறதுக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிங்களா..

அந்த பரசு ஓட பொண்ணு நல்லா மீன் குழம்பு வச்சா அவங்களேயே கல்யாணம் பண்ணி இருக்பீங்களா, மீனா நல்ல குணமானவ, அன்பானவ இப்படி தானே நீங்க சொல்லி இருக்கணும் என்று சண்டை போடுகிறார்.. உடனே முத்து நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை உனக்கு இருக்கிற நிறைய திறமைகளில் சமையலும் ஒன்னு அப்படி தான் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு மனோஜ் வேலைக்கு போயிட்டு லன்ச் பேக் உடன் வீட்டிற்கு வருகிறார்.. அதைப் பார்த்து முத்து என்ன இவன் லஞ்ச் பேக் எடுத்துட்டு போறத பார்த்தா வேலைக்கு போற மாதிரியே தெரியலையே என்று சொல்ல ரோகினி முத்துவிடம் அவரைப்பற்றி எதுவும் பேசுற வேலை வச்சுக்காதீங்க அவர் பாக்குற வேலையில எவ்வளவு கஷ்டம் இருக்கு என்று சொல்ல..

மீனாவும் கார் ஓட்டுவதும் எவ்வளவு கஷ்டம் தெரியுமா முதுகு எல்லாம் வலிக்கும் என்று முத்துவிற்கு சப்போர்ட் பண்ணுகிறார். பிறகு விஜயா நான் ரவிக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன் எனக்கு தூரத்து சொந்தம் நாளைக்கு அவங்க மாப்பிள்ளை பார்க்க நம்ம வீட்டுக்கு வராங்க, அண்ணாமலை ரவி கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க விஜயா அதெல்லாம் ரவி கிட்ட நான் சொல்லிக்கிறேன்.

நான் சொன்னா அவன் கேட்பான் என்று சொல்கிறார். ஆனால் பொண்ணு வீட்டில் இருந்து வரும் நேரத்தில் முத்து மட்டும் வீட்டில் இருக்கக் கூடாது அவன் இருந்தால் ஏதாவது பிரச்சனை பண்ணுவான் என விஜயா நினைக்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது