நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்தை கௌதம மேனன் இயக்கியிருந்தார்.. கௌதம் இதுவரை சிம்பு வைத்து எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் இந்த படமும் வெற்றி பெறும் என வெளிவருவதற்கு முன்பே பலரும் கூறி இருந்தனர்.
அது தற்பொழுது உண்மையாகிவிட்டது இந்த படம் வெளிவந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிம்பு உடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், kayadu lohar மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் குறிப்பாக சிம்பு சொல்லவே வேண்டாம் படத்தின் கதைக்காக தனது உடல் எடையெல்லாம் குறைத்து ஒரு சின்ன பையனாக நடித்து மிரட்டி இருந்தார்.
இது தற்பொழுது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது படம் வெளியாகி தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெறுவதன் காரணமாக வசூலும் ஜோராக நடந்து வருகிறது இதுவரை மட்டுமே இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது அண்மையில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டிங் நடந்தது அப்பொழுது சிம்பு தொடங்கிய பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதில் ஒருவராக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டார் அப்பொழுது பேசிய அவர் கண்டிப்பாக சிம்புவுக்கு தேசிய விருது கிடைக்கும்.. படம் தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்து இருக்கின்றது படம் ஹிட் அல்ல.. பம்பர் ஹிட் இந்த திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது.
நடிகர் சிம்பு இந்தப் படத்தில் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்து இருந்தார் இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது வாங்குவார். அதற்கு வேல் நிறுவனமும் உறுதுணையாக இருக்கும்.. இந்த திரைப்படத்திற்காக அவர் கடினமான உழைப்பை கொடுத்திருக்கின்றார் சிம்பு அதற்கு தகுதியானவர் குழந்தையிலிருந்து நடித்துக் கொண்டு வருகிறார் என கூறினார்.