குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது சினிமா உலகில் ஹீரோவாக, இயக்குனராக, பாடகராக என பல்முகத்தன்மை கொண்டு ஓடுபவர் நடிகர் சிம்பு இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள்தான் அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் நடித்த மாநாடு திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்.
அந்த படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் உடன் கைகோர்த்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிம்பு. இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர்
இதனால் அவரது மார்க்கெட்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது சினிமா உலகில் வெற்றியை ருசிக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் காதலில் விழுந்து விட்டார் வெகு விரைவிலேயே திருமணம் என பலரும் கிசுகிசு என்றனர் .
ஆனால் சிம்புவுக்கு வயதாகிறது தவிர கல்யாணம் என்ற யோகம் மட்டும் இன்னும் அவருக்கு அமையவே இல்லை இப்படி இருக்கின்ற நிலையில் அவரது தந்தையும் சிம்புவுக்கு வெகு விரைவிலேயே திருமணம் என சொல்லுவாரே தவிர சிம்புவுக்கு திருமணம் அமைவதற்கான எந்த ஒரு அறிகுறியுமே இதுவரை இருந்ததில்லை இந்த நிலையில் சிம்புவிடம் ரசிகர் ஒருவர் வயசு ஆகுதே இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க என கேட்க..
சிம்பு பதில் அளித்தது என்னவென்றால் சில பேர் 50 வயசுல சில பேர் 60 வயசுல செத்துடுறாங்க ஆனால் அதே 50 60 வயசு உள்ளவர்களும் இருக்கிறார்கள் அவர்களிடம் போய் டேய் உன் வயசு உள்ளவங்க எல்லா செத்துட்டாங்க நீ இன்னும் ஏன் உயிரோட இருக்க என அப்படி கேட்க முடியுமா அது அது எப்பப்பா நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என கூறினார்.