அனைத்து உண்மையும் தெரிந்த பிறகும் ஆகாஷை திருமணம் செய்துகொள்ளும் வாணி.! வெளிவந்த ப்ரோமோ..

சன் டிவியின் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல் அறிமுகமாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் தொடர்ந்து சன்டிவி ஏராளமான முயற்சிகளை செய்து வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி உள்ள சீரியல் சீரியல்தான் சிப்பிக்குள் முத்து.  இந்த சீரியல் அறிமுகமான சில வாரங்களிலேயே மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதால் ரசிகர்கள் பெரிதும் ப்ரோமோவை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சீரியல் அக்கா தங்கை கதை கிடையாது.

அதாவது தங்கை பிறந்தநாளில் நாளில் இருந்தே தனது மகள் போல் வளர்க்கும் அக்காவின் கதை தான். தனது தங்கைக்காக அனைத்து தியாகங்களையும் செய்யும் அக்கா தனது தங்கை விரும்பும் பையனை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.  இவ்வாறு அந்த பையனின் வீட்டில் தன்னைப் பற்றி கூறும் பொழுது எங்களுடைய பெரிய பையனை நீ திருமணம் செய்து கொண்டினா எங்களுடைய சின்ன பையன் உன்னுடைய தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று வாக்களிக்கிறார்கள் குடும்பத்தினர்கள்.

இதற்கு ஒப்புக்கொள்கிறார் அக்கா.  இவ்வாறு பல தடைகளை தாண்டி அவருடைய தங்கை திருமணம் முடிந்த நிலையில் அவருடைய அக்காவிற்கு ஒரு மன வளர்ச்சி குன்றிய இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளார்.

மேலும் இந்த சீரியல் தெலுங்கில் ‘செல்லேலி காபுரம்’ என்ற சீரியலின் ரீமேக் தான் சிப்பிக்குள் முத்து.  மேலும் இந்த சீரியலின் மூலமாக கன்னட சீரியல் நடிகர் ஜெய் டிசோசா தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகிவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் வாணியின் சித்தியும் பொன்னியும் சேர்ந்து பொய் சொல்லி வாணி-ஆகாஷ் திருமணத்தை நடத்தி வைப்பது வாணிக்கு தெரிந்துவிட்டது.

அவரின் மூத்த தங்கையும் வாணியின் தோழி நந்தினியும் தான் இந்த விஷயத்தை கண்டுபிடிக்கிறார்கள்.  சித்தியும் பொன்னியின் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற அதிர்ச்சியை வாணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  உடனே இந்த கல்யாணத்தை நடத்தலாம் என்கின்றார் வாணியின் தங்கை.  இருந்தாலும் பல தடைகளைத் தாண்டி ஆகாஷை திருமணம் செய்து கொள்கிறார் வாணி.