மாநாடு படத்தின் சிங்கள் ட்ராக்.? இப்போ வெளிவராது ஒத்த காலில் நிற்கும் தயாரிப்பாளர்.? காரணம் என்ன தெரியுமா.?

maanaadu
maanaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துஉள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.

சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பட்டைய கிளப்பு கொண்டு வருபவர் வெங்கட்பிரபு மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் சிம்புக்கு மாநாடு திரைப்படமும் மிகப்பெரும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் எடையை குறைப்பது வேற மாதிரியான லுக்கில் செம சூப்பராக இருக்கிறார் சிம்பு இந்த திரைப்படத்திற்கு அவரது பெயர் அப்துல் காலிக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இதில் அவர் இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவருடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன்,  எஸ் ஜே சூரியா, டேனியல் போப் போன்ற பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர் இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதால் போஸ்ட் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு தற்போது திட்டமிட்டு உள்ளது ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார் படத்தின் ஃபர்ஸ்ட் டைம் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தள்ளி போய் வைத்துள்ளது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார் மேலும் இதற்கான அறிவிப்பை விரைவில் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்பாளரையும், பட குழுவினரையும் படத்தின் சிங்கிள் ட்ராக் போஸ்டரை வெளியிட கேட்டு கொண்டு வந்த நிலையில் தயாரிப்பாளர் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் அவர் கூறியது தற்போது நிலவும் சூழலில் சரி இல்லாதது மேலும் நாம் சினிமா பிரபலங்கள் பலரை இழந்து வருகிறோம் அதனால் இப்படி இருக்கிற சூழலில் படத்தின் சிங்கிள் ட்ராக் போஸ்டரை வெளியிடுவது சரியாக இருக்காது என கூறி உள்ளார்.

மக்கள் அனைவரும் இதிலிருந்து திரும்பட்டும் நிச்சயம் நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே இந்த படத்தின் சிங்கிள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.