சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் ஒரு சில திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் வருடத்திற்கு ஒரு பாடலுக்காவது நடனமாடி அதற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்திற்கு வாங்கும் சம்பளமாக அந்த ஒரே ஒரு பாடலுக்கு வாங்கி அதிக சம்பளம் பெற்று விடுகிறார்கள் அந்த பாடலும் செம ஹிட் ஆகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியாகிய புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் மூலம் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது. மேலும் இந்த பாடலுக்கு சமந்தா ஆடி இருந்ததால் என்னமோ மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் ‘லைலா மைன் லைலா’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் இவரும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கினார் இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சிகினி சம்மேனி என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி பல கோடி சம்பளமாக பெற்றார் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இப்படி ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடமாடி பல நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார்கள் அந்த லிஸ்டில் ஐந்து நடிகைகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலாவதாக சமந்தா உ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி ஐந்து கோடி வரை சம்பளமாக பெற்றார். அவரைத் தொடர்ந்து சன்னிலியோன் லைலா மைன் லைலா என்ற பாடலுக்கு நடனமாடி மூன்று கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் மேலும் கத்தினா கைஃப் சிக்னீ சம்மேளி என்ற பாடலுக்கு நடமாடி இரண்டு கோடி வரை சம்பளமாக பெற்றார் அது மட்டுமில்லாமல் நடிகை ஜாக்லின் பெர்னாடஸ் ஜாடோ கி ஜப்பி என்ற பாடலுக்கு நடனமாடு 40 லட்சம் வரை சம்பளமாக பெற்றார் அவறைத் தொடர்ந்து மல்லிகா ஷெராவத் ராசியா என்ற பாடலுக்கு நடனமாடி 1.5 கோடி வரை சம்பளமாக பெற்றார்.