விஜய் டிவியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 4 நிறைவு பெற்றது. இந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரி அர்ஜுனன் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்றது.
இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் தங்களது அன்புகளை பகிர்ந்து இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா பங்கு பெற்றார்கள். சுசித்ரா நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஒருவாரம் மட்டுமே இருந்தார்.
சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கி பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போதுதான் அதில் இருந்து வெளிவந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் சாக போட்டியாளர்கள் மற்றும் கமலஹாசனை பற்றி மிகவும் தவறாக பதிவுகளை கூறிவருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை பதிவிட்டு கொஞ்சம் வெயிட் போட்டாலும் சிங்கம் சிங்கம் தான்ல cute max என்றும் பதிவிட்டுள்ளார்.