அம்மாவாகிட்டேன் என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்ரேயா கோஷல்.!! புகைப்படம் இதோ..

shreyasinger

பாடகி ஸ்ரேயா கோஷல் தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முன்பே வா, என் அன்பே வா என்ற பாடலை பாடி ரசிகர்களிடையே பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் விருமாண்டி படத்தில் உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல மற்றும் 7 ஜி ரெயின்போ காலனியில் நினைத்து நினைத்து பார்த்தால் போன்ற காதல் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரகுமான், டி இமான் போன்ற அனைவருடனும் இணைந்து ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் ஆதித்யா என்பவரை 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்ப்போது இவர் ஆறு வருடம் கழித்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

shreya ghosal3
shreya ghosal3

இந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் அவர்கள் இவருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் “மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷ்ரேயா உங்கள் அன்பான வரை எனக்காகவும் பாட தயார் செய்யுங்கள் அது வரையிலும் ஆண்டவன் எனக்கு தொடர்ந்து இசையமைக்கும் ஆசிர்வாதத்தை கொடுக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

shreya ghosalhusband
shreya ghosalhusband

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஷ்ரேயா கோஷல் அவர்கள் “உங்கள் வார்த்தைகள் மதிப்புமிக்கது மிக்க நன்றி மனதை தொட்டுவிட்டது நீங்கள் சொல்வது உண்மை ஆகட்டும் என ஈமானுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்”. இதோ அந்த புகைப்படம்.