திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைவார்கள் அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தனர்.
அதன் பிறகு இவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன மேலும் பல மேடை கச்சேரியிலும் பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தனர். வெள்ளி திரையில் இவர்கள் பல படங்கள் பாடி உள்ளனர் அந்த வகையில் இவர் பாடிய சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற என்ன மச்சான், புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சாமி என் சாமி..
போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகின. இப்படி இருக்கின்ற நிலையில் ராஜலட்சுமிக்கு மிகப்பெரிய ஒரு அதிஷ்டம் அடித்திருக்கிறது. ராஜலட்சுமி செந்தில் சைலன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.
அந்தப் படம் முழுக்க முழுக்க தந்தை மகள் பாசப்பினைப்போடு பெண்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கும் ஒரு கதையாக உருவாகும் என கூறப்படுகிறது கதை திரைக்கதை வசனம் எழுதி கணபதி பாலமுருகன் இயக்குகிறார் இவர் கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் நார்மல் பிலிம் பேட்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் மாதிரி உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..