பிரபல தமிழக கிரிக்கெட் வீரரை சந்தித்து கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பாடகி பிரகதி.! அதுவும் எங்கு தெரியுமா.?

singer-pragathi

விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது மேலும் அதில் ஜூனியர், சீனியர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து பட்டிதொட்டி அங்கும் பிரபலமடைந்தவர் தான் பாடகி பிரகதி. இவர் இதற்கு முன்பு ஜெயா டிவியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடல் நிகழ்ச்சியில் போட்டி இட்டு முதல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜெயா டிவி, விஜய் டிவி என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர் இந்நிகழ்ச்சிகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாடகிய என்ற அந்தஸ்தையும் தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவருடைய சில புகைப்படங்கள் கவர்ச்சியில் அத்து மீறி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாகவும் வதந்தி வந்த நிலையில் பிறகு அது உண்மையில்லை தெரியவந்தது. மேலும் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ள பிரகதி நடிகை கீர்த்தி பாண்டியன் உடன் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கிறார். அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்றுள்ள கீர்த்தி மற்றும் பிரகதி அங்குள்ள தெரு உணவான பிரட் ஆம்லெட், ஜூஸ், பிஸ்கட், டீ, இனிப்பு வகைகள் போன்றவற்றை உண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

pragathi 1
pragathi 1

மேலும் நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகன் இவர் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அவர் துன்பா அன்பிற்கினியால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் கண்ணகி திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தை பிரகதி மும்பை இந்தியா கேட்டில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரகதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.