விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் பாடகி பிரகதி.
இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் குமாரை காதலித்து வருகிறார் என்ற வதந்தி சில காலங்களாக இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அது வதந்தி மட்டும்தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் ஹாலிவுட் நடிகை போல முழு மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.