தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பயணித்து வருவர் சின்மயி. இது வரை பலதரப்பட்ட படங்களுக்கு நல்ல பாடலை பாடி கொடுத்துள்ளார் இதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது சினிமாவில் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சின்மயி சில சர்ச்சையான சிக்கி அதிலும் பிரபலமடைந்தார்.
பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால் மேலும் பிரபலமடைந்தார் சின்மயி எப்பொழுதும் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஓப்பனாக சொல்லிவிடுவது அவரது வழக்கம் அந்த வகையில் சின்மயி வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனைக் கேட்ட வைரமுத்துவும் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். ஆனால் மறைமுகமாக சமூக வலைதளப் பக்கத்தில் பகை மூண்டது அது தீர்ப்பு இதுவரையிலும் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படியிருக்க சின்மயி திடீரென தென்னிந்திய திரை உலகில் மிக சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகையான சமந்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை சின்மயி சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் சமீபத்தில் பார்த்து உள்ளார் இதில் சமந்தாவின் நடிப்பை பார்த்துவிட்டு வியந்து இவர் உண்மையிலேயே ஒரு ராக்ஸ்டார் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் சின்மயை சமூக வலைத்தளத்தில் கமெண்ட்டுகள் மூலம் கழுவி ஊற்றினர்.
காரணம் இந்தப் படத்தில் சமந்தா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் நடித்திருந்ததால் சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்கள் அவரை விமர்சித்து கொண்டு வருகின்றனர்.