தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர்தான் வைரமுத்து. இவர் பல திரைப்படங்களுக்கு பாடலை எழுதியிருக்கிறார் அதேபோல பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பதிவு போட்டாலும் அந்தப் பதிவை பார்த்துவிட்டு பிரபல பாடகி ஒருவர் திட்டி தீர்த்து வருகிறார்.
அதாவது கவிஞர் வைரமுத்து சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயியை பாலியல் தொல்லை செய்ததாக சின்மயி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல் பலர் தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வந்தனர் அதாவது வைரமுத்து அப்படியாப்பட்ட ஆள் கிடையாது என்று கூறி வந்தார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் வைரமுத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் இதை பார்த்து கடுப்பான சின்மயி அவர் ஒரு பதிவை போட்டு இருந்தார் இப்படி வைரமுத்து எந்த பதிவு போட்டாலும் தித்தி தீர்த்து வரும் சின்மயி தற்போது வைரமுத்து போட்ட ஒரு பதிவை பார்த்துவிட்டு படும் மோசமாக திட்டி இருக்கிறார்.
அதாவது வைரமுத்து அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைக் குறித்து ஒரு அழகான கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த சின்மயி கா* வெறியர்கள் பா**ல் வன்கொடுமை செய்பவர்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி வைரமுத்துவை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இவர்களுடைய அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
அதாவது வைரமுத்து, மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்: மதித்தல் கேட்கிறாள், வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்: கல்வி கேட்கிறாள், ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண் : நம்பிக்கை கேட்கிறாள், கொடுத்துப் பாருங்கள் அவளைப் பாதுகாப்பால் ஆண்களையும் என்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த கவிதையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த சின்மயி அவ்வீட்டு வாசலை தாண்டும் பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண் பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்: நியாயம் கேட்கிறாள் என்று தகாத வார்த்தைகளில் வைரமுத்துவை திட்டி இருக்கிறார்.
இதோ அந்த பதிவு…
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. https://t.co/E1671ftmn7
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2023