தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர், இவரை ஷங்கர் என்பதைவிட பிரமாண்ட இயக்குனர் என்று தான் பலரும் அழைக்கிறார்கள், ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தனது பிரம்மாண்டத்தை காண்பிப்பார். அதனால் தான் இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என பெயர் வந்தது.
ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஷங்கரையும் மோசமாக விமர்சித்து பேட்டியில் ஒரு பிரபலம் பேசியது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை காமெடி நடிகர் சிங்கமுத்து தான், காமெடி நடிகர் சிங்கமுத்து ஒரு பேட்டியில் ஷங்கரை கேவலமாக விமர்சித்து பேசியதுதான் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அவர் பேசியதாவது, சங்கர் ஆரம்ப காலத்தில் சினிமா பயணத்தின் போது அவருடைய நண்பர்களுடன் சைக்கிளில் என்னுடைய அரிசி மண்டிக்கு வருவார்.
அப்போதுதான் சங்கர் விஜய்யின் அப்பாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார், ஷங்கர் சைக்கிளில் அவரது நண்பருடன் என்னுடைய அரிசி மண்டிக்கு வருவார் என சிங்கமுத்து கூறினார், அதுமட்டுமில்லாமல் நான் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்து சங்கர் தன்னுடைய கையை பார்க்க சொன்னாராம்.
அப்பொழுதே சங்கர் கையை பார்த்த சிங்கமுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார், ஏனென்றால் சங்கர் ஒரு பிரம்மாண்ட இயக்குனராக வருவார் என்பது அவரது கையில் தென்பட்டதாம், அப்பொழுதுதான் சிங்கமுத்து கூறியுள்ளார் இவ்வளவு பெரிய இயக்குனர் என்னிடம் ஓசிடி வாங்கி குடிக்கிறதா என பெருமைப் பித்தன் போல உளறிக்கொட்டி உள்ளார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் நீ ஏற்கனவே பிராடு இதுல ஷங்கரை வேற கேவலப் படுத்துறா என சமூக வலைத்தளத்தில் சிங்கமுத்துவை அர்ச்சனை செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் கேட்கிறவன் கேனயனா இருந்தா எலி கூட ஏரோப்பிளேன் ஓட்டும் என கூறுவார் என கமெண்ட் செய்துள்ளார்கள்.