சிங்கம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஸ்டார் ஆக முடியாமல் புலம்பும் பிரபல நடிகர்.

singam-tamil360newz
singam-tamil360newz

Singam first actor choice : 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சூர்யா-அனுஷ்கா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சிங்கம், இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது, அதேபோல் ரசிகர்களிடம் இந்த திரைப்படம் வைரலாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என தொடர்ச்சியாக வெளியாகியது இதற்கு காரணம் படத்தின் வசூல் தான், அதேபோல் தமிழில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா என அனைத்துப் பகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

சூர்யாவுக்கு தென்னிந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டை உயர்த்தியது சிங்கம் திரைப்படம் தான், இந்த திரைப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் செய்தார்கள், அதேபோல் சூர்யாவை ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்திய திரைப்படமும் சிங்கம் தான்.

இந்த சிங்கம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா நம்ம விக்ரம் தான், சிங்கம் திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஹரி முதன்முதலில் விக்ரமிடம் தான் கூறியுள்ளார், ஆனால் விக்ரம் ஒரே மாதிரியான போலீஸ் கதை என்பதால் படத்தை நிராகரித்துள்ளார், அதன்பிறகு இந்த கதை சூர்யாவிடம் செல்ல கதையின் சுவாரஸ்யத்தை தெரிந்து கொண்ட சூரிய உடனே ஓகே சொல்லி நடித்துவிட்டார்.

சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது மார்க்கட்டையும் உயர்த்தி உலக அளவில் பிரபலம் அடைந்தார், சிங்கம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால், விக்ரம் இந்த திரைப்படத்தில் நாமே நடந்திருக்கலாம் என வருத்தப்பட்டாராம்.