பொதுவாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவார்கள். ஒரு சிலர் சுத்தமாக சினிமாவிலிருந்து விலகி விடுவார்கள்.
இன்னும் சிலர் பெரிதாக ஆர்வம் காட்டாமல் சில படங்களில் மட்டுமே நடித்து வருவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சினேகா. இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அதோட புன்னகை அரசி என்ற செல்லப் பெயருடன் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
சில வருடங்கள் கழித்து தனுஷுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோடு சில விளம்பரங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அந்த குழந்தைகளுக்கு விஹான் மற்றும் அத்யாந்தா என்று பெயர் வைத்துள்ளார்கள். சமீபத்தில் தான் தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாளை மிகவும் விமர்சியாக கொண்டாடினார்கள். இந்நிலையில் மீண்டும் சினேகா தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தூங்கி எழுந்ததும் கூட அழகாக இருக்கிறீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.