ஒரே நேரத்தில் பாக்யலக்ஷ்மி, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏற்பட்ட மாற்றம்.!

baakiya-lakshmi-pandiyan-stores
baakiya-lakshmi-pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி.

இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேற பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா கோபியை வீட்டை விட்டு வெளியேற்ற தற்பொழுது விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல்களின் வசனம் எழுதுபவர் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக இதற்கு மேல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சரவணன் என்பவரும் பாக்கிய லக்ஷ்மி சீரியலில் பாரதி தம்பி என்பவரும் இனி வசனம் எழுத இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் தொடர்ந்து சன் டிவியின் கயல் சீரியல் இருந்து வந்த நிலையில் அதனை ஓவர் டேக் செய்து முதலிடத்தினை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. மேலும் கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலினை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிரை முல்லையின் அக்கா மிகவும் தரகுறைவாக பேச நிலையில் இந்த மாதத்திற்குள் லாபத்தை எடுத்துக்காட்டுகிறேன் என சபதம் எடுத்துள்ளார் எனவே இந்த சபதத்தில் ஜெயிப்பாரா? கதிர் என எதிர்பார்க்கப்படுகிறது.