விஜய் பாடலுக்கு தற்பொழுது வேற லெவலில் ஆட்டம் போடும் சிம்ரன்.! அதுவும் எந்த திரைப்படத்தின் பாடல் தெரியுமா.?

simran3

ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வந்தவர்தான் சிம்ரன் இவர் அந்த காலத்தில் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக அஜித்,விஜய்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் இவருக்கு தமிழ் திரை உலகில் நிரந்தரமாக ஒரு இடம் கிடைத்துவிட்டது.

தற்பொழுது விளங்கி வரும் நடிகர்களுக்கு முன்பே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார் மேலும் இவர் தற்பொழுது பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் இருப்பினும் இவரது நடிப்பை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் அதிலும் குறிப்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் சிம்ரன் அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அதேபோல் தற்போதும் இவரது வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது விஜய் ஆடிய ஆட்டோ ஓட்ட பூபதியும் நானடா என்ற பாடலுக்கு இவர் தற்பொழுது நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்ரன் இந்த வயசிலும் அருமையாக நடனம் ஆடுகிறார்.

இவரது நடனத்தை பார்க்கவே நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் இவரது நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களை நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம் என இவரை ஐஸ் வைத்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.