ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் இவர் 90 காலகட்டத்தில் அஜீத்-விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். அதுமட்டுமில்லாமல் சிம்ரனை இடுப்பழகி என கூறுவார்கள்.
சிம்ரன் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை, அதன்பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.
அதனால் பல ரசிகர்கள் மீண்டும் சிம்ரன் வந்து விட்டார் எனவும் ஒரு ரவுண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கிறார்கள். நடிகை சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆதிப் மற்றும் ஆதிக் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.
இதில் மூத்த மகன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் அட சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகான என வாயடைத்துப் போகிறார்கள்.