இளைஞருடன் ஆட்டம் போட்ட சிம்ரன்.! யாருகிட்ட சிம்ரன்கிட்ட முடியுமா.?

தமிழ்சினிமாவில் 90 காலகட்டங்களில் சினிமாவின் உச்சியில் நின்றவர் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் ,விஜய் ,விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் தற்போது தான் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்மையில் தான் அவருடன் கை கைகோர்த்தார்.

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலையில் கார்த்திக் சுப்புராஜ்இயக்கதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன்  நடித்தார் .  அவர் பல ஊடகங்களில் நான் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் அவருடன் மட்டும் நடிக்கவில்லை என  தெரிவித்திருந்தார். இப்பொழுது அது நிறைவேறியது இதனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சிம்ரன் அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லாததால் தற்போது அவர் யூடியூப் சேனல் மற்றும் டிக்டாக்கில் அடிக்கடி தனது வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். தற்போது அவர் டிக்டாக்கில் பாடலை கிரியேட் செய்துள்ளார். அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா மெகா ஹிட் அடித்த தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு செய்து உள்ளார்.

கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்தில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது வரை மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது அவர் இந்த பாடலுக்கு ஆடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.