தொண்ணூறுகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோரைச் சொல்லலாம், இதில் சீனியர் நடிகை என்றால் அது சிம்ரன் தான், இவர் அஜித், விஜய், சூர்யா என அனைவருடனும் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார், தற்பொழுது இவருக்கு திருமணமாகி குழந்தைகள் குடும்பம் என அவரது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.
அதனால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இவர் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார், ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார், அப்புறம் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார், இவர்கள் இருவருமே நடனத்திற்கு பெயர் போனவர்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் விருது விழாவில் புடவையில் வந்து அசத்தியுள்ளார்.
இதோ அதன் வீடியோ.
THE MOST AMAZING MOMENT at #jfwmovieawards2020! @SimranbaggaOffc and #juothika together! pic.twitter.com/Ax9O7wJxzE
— JFW (@jfwmagofficial) March 14, 2020