தமிழ் சினிமாவில் பல படங்களின் வாய்ப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளியவர்கள் லிஸ்டில் முதலில் சிம்பு தான். இவர் வேண்டாம் என்று சொல்லிய படங்களில் வேறு நடிகர் ஒருவர் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்களும் உள்ளார்கள்.
இவர் பொதுவாக அதிகமாக நடிப்புத் திறமை இருந்தாலும் சொல்லும் நேரத்திற்கு எந்த திரைப்படத்தையும் நடித்து முடித்துக் கொடுக்க மாட்டாராம். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளையும் கதை சரியில்லை என்று வேண்டாம் என்று கூறி விடுவாராம்.இப்படிப்பட்ட ஒரு நிலையில் இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பயந்து வந்தார்கள்.
எனவே இவருக்கு சில காலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதோடு இவர் மீது பல சர்ச்சைகள் எழுந்ததால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார். இவரும் வாரிசு நடிகராக தான் அறிமுகமானார்.
எனவே இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் மற்றும் வாரிசு நடிகர் என்ற பெயரினாலும் சினிமாவில் எளிதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல ஆதரவு கிடைத்து வந்தது எனவே இப்படிப்பட்ட தலைக்கணத்தால் தனது மார்க்கெட்டை இழந்து விட்டார்.
தற்பொழுது தான் அனைத்தும் தவறு என்று தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
அந்த வகையில் இவர் துரை இயக்கத்தில் தொட்டி ஜெயா திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார். கோபிகாவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகையை தான் நடிக்க இருந்தார் ஆனால் சில பிரச்சனைகளால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அதாவது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க தேர்வு செய்துள்ளார்.ஆனால் இதற்கு முன்பே இயக்குனர் துரை கோபிகாவை பதிவு செய்ததால் நயன்தாரா நடிக்க முடியாமல் போனது. இத்திரைப்படத்தில் கோபிகாவிற்கு பதிலாக நயன்தாரா நடித்திருந்தாலும் இத்திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.