Rajini : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி கண்டது.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய தலைவர் 170, லால் சலாம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியும் திரையில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்து வருகிறார். அவருக்கு படம் பிடித்திருந்தால் அந்த படத்தில் சிறப்பாக பணியாற்றிய படகு குழுவினர் மற்றும் நடிகர் வீட்டுக்கு அழைத்து..
புகைப்படம் எடுத்து கொள்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த சூழலில் தான் லியோ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்யாறு பாலு லியோ படத்தை ரஜினி பார்த்துவிட்டு அவர் சொன்ன வார்த்தைகளை என்ன என்பது குறித்து ஒரு பேட்டியில் விலாவாரியாக பேசி உள்ளார்..
லியோ படத்தை பார்த்த ரஜினி தயாரிப்பாளர் லலித் குமார் ப்ரோடக்ஷன் வேல்யூ அதிகம் இருக்கும் போல என மட்டும் தான் சொல்லி இருக்கிறார் படம் நன்றாக இருக்கிறது என்றோ.. இல்லை படத்தில் இந்த விஷயங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை இத்தனைக்கும் லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
இருந்தாலும் படத்தில் சிறப்பம்சங்கள் இருக்கின்றன அவர் ஒரு வார்த்தை கூட சொல்லாதது லியோ பட குழுவை ரொம்பவே அப்செட்டில் தள்ளி இருக்கிறது உண்மையில் ரஜினிக்கும் படம் பிடித்திருந்தால் இயக்குனர், தயாரிப்பாளர், அனிருத் ஆகியவர்களை நேரில் அழைத்து இருப்பார் மேலும் ஒரு புகைப்படம் எடுத்திருப்பார் என்றும் கூறினார்.