சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தை எதிர்த்து மோதும் முரட்டு நடிகர்..! ரேசில் ஜெயிக்கப் போவது யார்.?

simbu
simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் எப்பொழுதும் படங்களின் மூலம் மோதிப் பார்த்துக் கொள்வது வழக்கம் இதில் ஏதேனும் ஒரு படம் தான் வெற்றி பெறும் இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது இதனால் தயாரிப்பாளர்கள் டாப் ஹீரோக்கள் படங்கள் தொடங்கி இளம் ஹீரோக்கள் படங்கள் வரை சோலோவாக வெளியிடவே திட்டமிடுகின்றனர்.

இதனால் பெரிய அளவு படங்கள் நேருக்கு நேராக மோதுவதில்லை.. இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு படத்தை எதிர்த்து அருண் விஜய் படம் மோத இருக்கிறது இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளி வருவதால் யார் படம் வெற்றியை ருசிக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

சிம்பு மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு படம். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது அதனைத் தொடர்ந்து இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளதால் இந்த படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி அருண் விஜய்யின் சினம் திரைப்படம் ரிலீஸ்ஸாக உள்ளது.

இந்தப் படத்தில் அருண் விஜய் பாலக் லால்வானி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தை குமரவேலன் என்பவர் இயக்கி உள்ளார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண் விஜயின் சினம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் மோதுவதால் இந்த படத்தில் யார் படம் ஜெயிக்கும் என்பது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.