சிம்புவின் வல்லவன் திரைப்படம் இந்த சூப்பர் ஹிட் ரஜினி திரைப்படத்திலிருந்து சுடப்பட்டது தான்.! பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேச்சு.! அட இவ்வளோ நாள் இது தெரியாம போச்சே..

simbu
simbu

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் மிகவும் துடிப்புடன் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இடைப்பட்ட காலத்தில் நடிப்பில் பெரிதாக நாட்டம்  இல்லாததுபோல் நடித்ததால் சில தோல்விப் படங்களை தழுவினார்.

சிம்பு நடிப்பில் வெளியாகிய வல்லவன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் சிம்பு வல்லவன் திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக வெற்றி கண்டார். வல்லவன் திரை படத்தில் ரீமாசென், நயன்தாரா,  சந்தியா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

வல்லவன் திரைப்படத்தை சிம்புதான் இயக்கியிருந்தார். மிகவும் இளம் வயதிலேயே இயக்குனராக மாறியவர். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய திறமையால் தான் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் 18 வயதிலேயே மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் அதனைத் தொடர்ந்து வல்லவன் திரைப்படத்தை இயக்கினார் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

padaiyappa
padaiyappa

இதில் என்ன ஒரு கொடுமை என்றால் சிம்புவின் வல்லவன் திரைப்படம் ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் கதையும் ஒன்று என கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வல்லவன் திரை படத்தின் கதையையும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி படையப்பா திரை படத்தின் கதையையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும் என கூறுகிறார்கள் இதனை சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஓபனாக கூறிவிட்டார்.

ரஜினி நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படம்  1999 ஆம்  ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் கதையை தான் அப்படியே உல்டாவாக மாற்றி சிம்பு வல்லவன் என்ற பெயரை படத்தை எடுத்தார் எனக் கூறப்படுகிறது. படையப்பா திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரம் அதேபோல் வல்லவன் திரைப்படத்திலிருந்து சிம்பு கதாபாத்திரம் ஒன்றாக இருக்கும்.

அப்படிதான் படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் வல்லவன் திரைப்படத்தில் நயன்தாரா மேலும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரீமாசென் மிகவும் ஈசியாக ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. அதேபோல் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி படையப்பாவை பழிவாங்க துடிப்பார்.

அப்படிதான் வல்லவன் திரைப்படத்தில் ரீமா சென் சிம்புவை பழிவாங்க துடிப்பார். இந்த தகவல் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என புலம்புகிறார்கள்.