குழந்தை நட்சத்திரமாக தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்து பின்பு கதாநாயகனாக நடித்து பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகர் தான் சிம்பு இவர் தனது உடல் எடையை குறைத்து நடித்த முதல் திரைப்படம் என்றால் அது ஈஸ்வரன் திரைப்படம் தான்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும்.
என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் சிம்பு உடல் எடையை குறைத்து பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதால் பல இயக்குனர்களும் இவரை வைத்து திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் இவரை எப்படியாவது தனது திரைப்படத்தில் நடிக்க வைத்து விடனும் என பிளான் போட்டு வருகிறார்கள்.
அதேபோல் சிம்பு தற்போதும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது சிம்பு என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தில் புதிதாக நடித்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு ஒரு இசை கலைஞராக நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் சிம்புவின் நடிப்பு இந்த திரைப்படத்தில் நாங்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறோம் என கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.