சிம்புவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா.? அண்ணாந்து பார்க்கும் கோலிவுட் சினிமா

simbu
simbu

சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் சிம்பு.. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த இவர் திடீரென ஆக்சன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.

அது வெற்றிகளை கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவரது பல படங்கள் பிளாப் ஆகின.. ஒரு சில படங்கள் ட்ராப் ஆனது இதனால் சிம்பு இருகின்ற இடம் தெரியாமல் போனாதால் அவரது கேரியர் கிளோஸ் என பலரும் சொல்லி வந்த நிலையில் திடீரென தனது உடல் எடையை குறைத்து எண்ணங்களை மாற்றி புதிய அவதாரம் எடுத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ஹிட் அடித்தன அதனைத் தொடர்ந்து பத்து தல, மற்றும் பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி ஓடினாலும் 40 வயது ஆகியும்..

சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது குறிப்பாக அவரது அப்பா டி ராஜேந்திற்கு ரொம்பவும் வருத்தத்தை கொடுத்து இருக்கிறதாம். இது இப்படி இருக்க தற்பொழுது சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடித்து வரும் சிம்பு தற்போது தனியாக சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 119 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிம்புவின் பெயரில் சொகுசு கார், பங்களா என பல சொத்துக்கள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.