நடிகர் சிம்பு சில வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றினை கண்டு இருக்கும் நிலையில் அவருடைய நடிப்பில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. சினிமாவிற்கு ரீஎட்ன்ரி கொடுத்த இவர் 30 கிலோவுக்கு மேலாக எடையை குறைத்திருக்கும் நிலையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த பத்து தல திரைப்படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சிம்புவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. பல பிரச்சினைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பிறகு அவருடைய பெற்றோரான ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் மிகவும் கவலையில் இருந்து வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து வெற்றினை தந்து வருவதால் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
மேலும் சிம்புவிற்கு தற்பொழுது 39 வயது ஆகும் நிலையில் அவருக்கு இதுவரையிலும் திருமணம் ஆகவில்லை என்ற கவலை இருந்து வருகிறது. எனவே சமீபத்தில் இவருடைய அப்பா ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று தான் சொல்லியிருந்தார்.
இப்படி பல பிரச்சனைகளுக்குப் பிறகு பத்து தல திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு கிடைத்த வரவேற்பை பார்த்து அவருடைய பெற்றோர்கள் நெகிழ்ந்து போயிருந்தனர். எனவே அனைவரும் மகிழ்ச்சியிலிருந்து வருவதால் சிம்புவுக்கு விரைவில் திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்களாம்.
அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜேந்தர் தற்போது தன்னுடைய உடல்நிலை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை சிம்புவுக்கு திருமணம் நடந்தாலே போதும் என முடிவெடுத்துள்ளார் அந்த பெண்ணை பிடித்து போக விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடக்க இருக்கிறதாம்.