தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரு திரைப்படத்தில் கூட வெற்றி காணாமல் இருந்து வந்த நடிகர் தான் சிம்பு சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும் இத் திரைப்படமானது திரையரங்கில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் 8.24 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சிம்புவும் கௌதம் மேனன் இணைந்து அச்சம் என்பது மடமையடா விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைக்க உள்ளாராம். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து 10 தல என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.
அதேபோல தற்போது கொரோனா குமார் என்ற திரைப்படத்திலும் நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மற்றொரு திரைப் படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.