சினிமா உலகில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் சூப்பரான படங்களை கொடுக்கின்றனர் அந்த வகையில் நடிகர் சிம்பு சிறு இடைவெளிக்கு பிறகு உடல் எடையை குறைத்து தற்போது ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். முதலில் ஈஸ்வரன் படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும்..
அதன் பிறகு வெளிவந்த மாநாடு திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல..
இந்தப் படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன்பாக சூர்யா, ஜோதிகாவை வைத்து ஜில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என முன்பு சொல்லப்பட்டிருந்தாலும் தற்பொழுது படப்பிடிப்பு முடியாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மாறும் என தெரிய வருகிறது ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு சூப்பராக நடித்து வருகிறார் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து புகைப்படங்களும் வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பையே அதிகரிக்க வைக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கப்பட்டு வருகிறதாம் அந்த பாடலில் சிம்பு சூப்பராக நடனமாடி இருக்கிறாராம் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..