குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவரின் மீது பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்குப் பிறகு தற்போது தான் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனை தொடர்ந்து சிம்பு இப்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்டது.அந்த வகையில் தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்கள் .
அந்த வகையில் தற்போது டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டதாம் இந்நிலையில் இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார்கள். அந்த வகையில் தியேட்டரில் ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் அதிகமாக பரவி வருவதால் தற்பொழுது தியேட்டர்கள் உட்பட பல தொழில்கள் முடங்கி உள்ளது.
எனவே மாநாடு திரைப்படத்தை ஓடிடி வழியாக ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள். அந்த வகையில் இந்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் சிம்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாவதால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சும்மாவே சிம்பு காதல் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பார். இதுவே யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் உள்ளதால் ரசிகர்கள் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்து வருகிறார்கள். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதால் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகர், நடிகைகள் என்று அனைவருக்கும் தனது நன்றியை கூறியுள்ளார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படம் மாஸ் கலந்த திரில்லர் திரைப்படமாகும். மட்டுமல்லாமல் சிம்புவின் கேரியரில் ஒரு நல்ல படமாக அமையும் அதோட இத்திரைப்படம் மற்ற திரைப்படங்கள் போல் இல்லாமல் கொஞ்சம் டிஃபரண்டாக அரசியல் கலந்த திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மாநாடு திரைப்படம் இந்திய சினிமாவுக்கு புதுமையான கதைகளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.