சரியான ரன்னிங் டைமில் உருவாகி இருக்கும் சிம்புவின் ‘பத்து தல’.!

pathu-thala-1

சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்தப் படம் வருகின்ற 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வெளியானது.

அதிரடியான ஆக்ஷன் காட்சியாக உருவாகி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சிம்புவும் படத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு கடின உழைப்பை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் மிகவும் குண்டாக இருந்த சிம்பு பிறகு உடல் எடையை குறைத்து ஸ்கூல் பையன் அளவிற்க்கு ஸ்லிம் ஆனார். மேலும் பத்து தல படத்தில் மீண்டும் உடல் எடையை ஏற்ற வேண்டும் என்பதற்காக தற்பொழுது மீண்டும் குண்டாகி உள்ளார் இவ்வாறு  படத்திற்காக கடின உழைப்பை செலுத்தியுள்ளார் சிம்பு.

இந்தப் படத்தில் நடிகர் சிம்புவை தொடர்ந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், அனு சித்தாரா, டி.ஜே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ் புத்திரன், சென்றாயன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க கிருஷ்ணா இயக்கத் தெரிந்த படம் உருவாகி இருக்கிறது.

pathu thala
pathu thala

மேலும் இவர்களை தொடர்ந்து பரூக் பாஷா ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள நிலையில் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு 2:30 நிமிடம் என்பது ஒரு படத்திற்கு சரியான நேரம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.