ஆரம்பத்தில் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் சிம்பு அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு மீண்டும் திரைப்பட வேட்டையில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் சிம்பு பேசிய பொழுது தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறியது மட்டுமில்லாமல் எனக்கு இருக்கும் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சிம்பு சொன்னது ரசிகர்களை கண்ணீர் வடிய வைத்துள்ளது.
மேலும் பல ஆண்டுகள் கழித்து சிம்புவின் திரைப்படமானது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொழுது நான் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தயாராக உள்ளேன் அதற்கான கதைக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சிம்பு இனிமேல் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் இரண்டு மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தன்னுடைய திருமணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் சிம்புவிடம் பல கேள்விகள் கேட்டு உள்ளார்கள்.
அதற்கு நடிகர் சிம்பு நல்ல பொண்ணு இருந்தால் சொல்லுங்க என மறுத்துவிட்டாராம் அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்பு கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம்தான் வெந்து தணிந்தது காடு.
தொடர் திரைப்படத்தில் நடித்து வருவதன் காரணமாக சிம்பு மறுபடியும் விட்ட இடத்தை பிடித்து விடுவார் என அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.