பிரமாண்ட பட்ஜெட் படத்தில் இருந்து விலகிய நடிகர் சிம்பு.? காரணம் இந்த நடிகர், நடிகை தானாம்.? தீயாய் பரவும் செய்தி.

simbu
simbu

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி வெகுவிரைவிலேயே ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சிம்பு. குறைந்த வயதிலேயே சினிமா உலகில் ஹீரோவாக ஆனதால் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் போனார் என்று தான் கூற வேண்டும்.

ஒரு வழியாக பல வருடங்கள் கழித்து சினிமா எப்படிபட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு தற்போது காய் நகர்த்தி சிறப்பான படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அதன் பிறகு பத்து தல என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளி என்ற பெயரை எடுத்து வைத்திருக்கும் மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் போன்ற நட்சத்திர திரைப்படங்கள் நடிக்கின்றனர் இந்த படத்தில் மணிரத்தினம் சிம்புக்கு ஒரு சிறப்பான ரோல் கொடுத்து தான் கதையை எழுதினார்.

ஆனால் சிம்பு இந்த படத்தில் கமிட் ஆனால் நான் நடிக்க மாட்டேன் என நயன்தாரா சொன்னாராம் அதற்கு ஏற்றார்போல மற்ற நடிகைகளும் சிம்பு  வேண்டாம் என கூற மணிரத்தினம் ரொம்ப வருத்தப்பட்டார். இதை உணர்ந்துகொண்ட சிம்பு உங்கள் மீது எனக்கு மரியாதை இருக்கு சார் என்று கூறி இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இச்செய்தி தற்போது சிம்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.