சினிமா உலகில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தியது .
இந்த படம் செம ஹிட்டானதை தொடர்ந்து ஒருகட்டத்தில் சிம்புவை வேண்டாம் என்று நினைத்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது சிம்புவை வைத்து படம் பண்ண போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் சிம்பு ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒரு படம் பண்ண உள்ளார். அதற்கு முன்பாகவே அடுத்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு.
இத்திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த படத்தை ஐசரி கணேஷ் நிறுவனம் தயாரித்து வருகிறார். அண்மையில் கூட இந்த நிறுவனம் சிம்புவின் சினிமா வளர்ச்சியை கண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
வெந்து தணிந்தது காடு படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் மற்றொரு டாப் ஹீரோவான விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் சிம்பு இருவரும் மோதல் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு முன் சசிம்பு மற்றும் விஜயின் ஒரே நாளில் வெளிவந்த திரைப்படங்கள் துப்பாக்கி போடா போடி மாஸ்டர் ஈஸ்வரன் ஆகிய படங்கள் மோதிக் கொண்ட நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு மற்றும் பீஸ்ட் ஆகிய படங்கள் ஒரே நாளில் மோத உள்ளது.