சிம்பு தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டும் தனது பயணத்தை நிறுத்தி கொள்ளாமல் இயக்குனராகவும், பாடகராகவும்,இசை அமைப்பாளராகவும், நடன கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டு சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக மாறினார் சினிமா உலகில் ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை கண்டு வந்த சிம்பு ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளால் காணாமல் போனார்.
அதிலிருந்து மீண்டு வருவதற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்தது கெட்ட பழக்கங்களை தூக்கி எறிந்து விட்டு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன் பின் இவர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் மாநாடு.
இப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது மேலும் சிம்பு கேரியரில் முதல் 100 கோடி வசூல் படமாக மாநாடு படம் மாறியது. சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற பல்வேறு படங்களை கைவசம் இருக்கிறது வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறதாம்.
சிம்பு வெற்றியை நோக்கி இப்பொழுது ஓட காரணமே அவரது அம்மா வாங்கி கொடுத்த கார்தான் என கூறப்படுகிறது அவரது அம்மா மினி கூப்பர் கார் ஒன்றை சிம்புவின் பிறந்த நாளன்று வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரை பயன்படுத்தியதற்கு பிறகுதான் மாநாடு திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் எடுத்ததாகவும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது மேலும் இப்பொழுதுகூட நடிகர் சிம்பு ஒரு படத்தில் 20 கோடி சம்பளம் வாங்குவதற்கும் அந்த ராசியான கார் எண் கூறப்படுகிறது
சிம்புவே தனது பிரபலங்கள் மற்றும் நண்பர்களிடம் இந்த கார் வந்த பிறகுதான் எனக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளதாக மறைமுகமாக சொல்லி வருகிறாராம். சொல்லப்போனால் சிம்பு இனி எத்தனை கார்கள் வாங்கினாலும் அவரது அம்மா கொடுத்த மினி கூப்பர் காரை மட்டும் விடப் போவதும் இல்லையாம் எங்க போனாலும் அந்த காரை தான் பயன்படுத்த இருக்கிறாராம் ஏனென்றால் அவ்வளவு ராசியான கார்ராக அதை பார்க்கிறாராம்.