சில மாதங்களுக்கு முன்பாக சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நடிகர் சிம்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அந்த வகையில் இவர் எப்பொழுதுமே படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்தது கிடையாது ஆனால் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே சிம்பு வந்து விடுகிறாராம். அப்படி வெகுநாளாக இழுத்துக் கொண்டு இருந்த மாநாடு திரைப்படத்தில் மீதமுள்ள படப்பிடிப்பை நடிகர் சிம்பு சமீபத்தில் மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியது மட்டுமில்லாமல் சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் தயாரித்திருந்தார்.என்னதான் சிம்பு தற்சமயம் பலராலும் கவனிக்க பட்டாலும் இன்னும் பல பிரச்சினைகளை அவர் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.
பொதுவாக நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது அவர் வேற லெவலில் தன்னுடைய திறனை திரைப்படங்களில் காட்டி உள்ளார். அந்த வகையில் திரைப்படங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்து மன்மதன் வல்லவன் வாலிபன் என்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல் எடை அதிகமானதன் காரணமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாமல் அதனை குறைத்தே ஆக வேண்டும் என முடிவு செய்தாராம் இதனால் பல நாட்கள் இரவில் பசியுடன் உரங்கியுள்ளாராம். அவர் நான்கு மாதங்களாக எந்த ஒரு பார்ட்டி பொது நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளாமல் தனது உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில் பார்ட்டியில் சந்தோஷமாக இருந்த தருணங்களை நான் இழந்து விட்டேன் என கூறியுள்ளார். மேலும் இனிமேல் பார்ட்டி என்ற வார்த்தைக்கு என்னுடைய வாழ்க்கையில் இடமே கிடையாது என்று கூறியதுமட்டுமில்லாமல் இந்த லாக் டவுன் நேரத்தில் நான் பல்வேறு கதைகளை எழுதி வைத்துள்ளேன் என்றும் விரைவில் சிம்பு இயக்குனராக அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.