தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு பிரச்சனை காரணமாகவும் தன்னுடைய உடல் எடை கூடியதன் காரணமாக பல வருடங்களாக திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்து வந்தார்.
பின்னர் இவருடைய மவுசு குறைந்த நிலையில் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு முழுக்க முழுக்க முக்கிய காரணம் நடிகர் சிம்புதான் ஏனெனில் அவருடைய அலட்சிய தன்மை காரணமாக தான் இப்படி ஒரு நிலை அவருக்கு நேரிட்டது.
அந்த வகையில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குரைத்துவிட்டு நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைபடம் ஓரளவு வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
இன்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் அவர் திரைப்படம் பற்றிய அப்டேட்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 1.26 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 1.26 நம்பரை கூட்டினால் ஒன்பது என்ற நம்பர் வருகிறது இதனால் ரசிகர்கள் நீங்கள் மீண்டும் மீண்டும் நயன்தாராவின் ராசியை வைத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறீர்கள் என அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.