ஒருவழியாக ரஜினியுடன் இணைந்த சிம்பு.? காரணம் தளபதி விஜய் இயக்குனர் தான்.

rajini-and-simbu
rajini-and-simbu

சினிமா உலகை பொறுத்தவரை இளம் நடிகர்களுக்கு இருக்கும் ஆசையை எப்படியாவது டாப் நடிகருடன் நடித்துவிட வேண்டும் என்பதுதான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர்கள்ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த லிஸ்டில் முதன்மையானவராக இருப்பவர்தான் அஜித் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் அதிலும் குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக நடித்தால் சிறப்பு என கூறினார் அதேபோல லிட்டில் ஸ்டார் சிம்பு, ராகவா லாரன்ஸ் போன்றவரும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பதே மிகப்பெரிய ஒரு ஆசையாக வைத்துள்ளனர்.

ரஜினி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வெற்றியை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் இவர் சிறுத்தை சிவாவுடன் கைகொடுத்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை சிறந்த இயக்குனர்கள் யாரேனும் ஒருவர் இயக்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டது ஒருவழியாக அந்த இயக்குனரை தேர்வு செய்துள்ளார் ரஜினி.  ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யப் படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு தகவலும் சமூக வலைதளப் பக்கங்களில் உலா வருகிறது அதாவது ரஜினியின் 169 திரைப்படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாட இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சமூக வலைதளப் பக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.