“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள சிம்பு – மொத்தம் எத்தனை கெட்டப் தெரியுமா.?

simbu-
simbu-

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் எவ்வளவு அசுர வளர்ச்சியை ஆரம்பத்தில் ஹீரோவாக எட்டினாரோ அதே அளவுக்கு பல சர்ச்சைகளையும் சந்தித்தார். நடிகைகளுடன் இரவு பார்ட்டி மற்றும் படங்களில் கலந்துகொண்டு பாதியிலேயே கைவிடுவது சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வராதது என அடுக்கடுக்காக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டும் உடல் எடையை குறைத்து மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ள சிம்பு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளிவந்து வேற லெவலில் இருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கின்றன.

இப்படியிருக்க ஒரு சூப்பர் அப்டேட் ஒன்றும் வெளியாகி உள்ளது அதாவது சிம்பு இந்த திரைப்படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கவில்லையாம் உண்மையில் சொல்லப்போனால் சிம்பு இந்த திரைப்படத்தில் மட்டும் மொத்தம் ஐந்து விதமான கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சூர்யாவை வைத்து எடுத்த வாரணம் ஆயிரம் திரை படத்தில் சூர்யா பல கெட்டப்புகளில் நடித்து இருப்பார் அது போன்று இப்பொழுது அவர் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 கெட்டப்பில் நடிக்கிறார் என்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது.