என்னடா இப்படி படம் எடுத்து வச்சிருக்கீங்க.. “பத்து தல” படத்தை பார்த்து அதிர்ந்துப்போன சிம்பு.. குஷியில் ரசிகர்கள்

simbu
simbu

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் சிம்பு. இவரை ரசிகர்கள் அனைவரும் காதல் மன்னன், சின்ன தல,  லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பது வழக்கம். திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சிம்பு கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை..

பதிவு செய்த நிலையில் சிம்பு தற்போது நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகின்ற மார்ச் 30 ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியுள்ளதால் படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படம் என கூறப்படுகிறது படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்..

கௌதம் வாசுதேவ் மேனன், அனுசித்ரா, ப்ரியா பவானி சங்கர், சென்ராயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் பத்து தல படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடிகர் சிம்புவுக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த சிம்புவுக்கு நெஞ்சு அடைக்காத ஒரு குறைதானாம் அந்த அளவிற்கு சிறப்பாக வந்து உள்ளாராம்.

இதனால் சிம்பு அளவு கடந்த  சந்தோஷ்த்தில் இருக்கிறாராம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் படக்குழுவினருக்கு நன்றி சொன்னார்.  சிம்புவுக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறதாம் எனவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என சிம்பு நம்பி இருக்கிறார் சிம்புவின் இந்த செயலை பார்த்த அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி என்றால் பத்து தல படம் மிகப்பெரிய வெற்றி 100 கோடி வசூல் அள்ளுவது உறுதி என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் 31ஆம் தேதி ரோகிணி பக்கம் போயிடாதீங்க தலைவனுக்காக கூடுற கூட்டத்தை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்துடும் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.