நயன்தாராவால் பிரம்மாண்ட பட வாய்ப்பை பறிகொடுத்த சிம்பு..! எவ்ளோ நல்ல மனசு இவருக்கு..!

nayan-simbu1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2018 ஆம் ஆண்டு செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு மட்டும் இன்றி பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நல்ல திரைப்படம் என்றால் இந்த திரைப்படத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் தன்னதுடைய கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

ஆனால் இந்த திரைப்படத்தின் பணி சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற திரைப்படம்  படம் பிடிப்பில் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது அப்பொழுது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சிம்புவிடம் நீ இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அதற்கு சிம்பு சரிங்க சார் என கூறிவிட்டார்.

அதேபோல இந்த திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நயன்தாராவோ சில கண்டிஷன்கள் போட்டு உள்ளார் அதாவது இந்த திரைப்படத்தில் சிம்பு நடித்தால் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்று  கூறினார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி விக்ரம் ஆகிய இருவரும் இதே விஷயத்தை கூறினார்களாம் இதனை சொல்லாமல் புரிந்து கொண்ட நடிகர் சிம்பு அவர்கள் மணிரத்தினம் அவர்களிடம் சென்று நானே இந்த திரைப்படத்தில் விலகிக்கிறேன் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளாராம்.

அதனுடன் நடிகர் சிம்பு அவர்கள் மணிரத்தினத்திடம் நீங்கள் எப்பொழுது என்னை  நடிக்க கூப்பிட்டாலும் நான் வருவேன் என்றும் கூறி விடை பெற்றுள்ளார் இவ்வாறு சிம்பு நடந்து கொண்ட விதம் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வைரலாக பதிவு வருகிறது.

manirathinam-1
manirathinam-1