பத்து தல திரைப்படத்தில் நடிக்க முதலில் பயந்த சிம்பு.. காரணத்தை கேட்டு அதிர்ந்த படக்குழு.. வெளிவந்த அதிர்ச்சி ரசிகர்கள்

pathu-thala
pathu-thala

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தைப் பார்த்த பலரும் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்து வருவதாக கூறப்படுகிறது அந்த அளவிற்கு படம் பிரமாதமாக இருக்கிறதாம்..

பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், அனுசித்ரா, ரெடின் கிங்க்ஸ்லி, கலையரசன், சென்ராயன்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பத்து தல படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளதால் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தல திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்பு முதலில் ஒத்துக் கொள்ளவே இல்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

பத்து தல திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் முதலில் இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்கதான் படக்குழு முயற்சி செய்தது ஆனால் ரஜினி சில காரணங்களால் இந்த படத்தை தவறவிட பின் சிம்புவுக்கு கதை போய் உள்ளது. சிம்புவுக்கு இந்த படத்தில் நடிக்க முதலில் தயக்கம் காட்டியுள்ளார் காரணம் இந்த படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் இருந்தாம் அதனால் யோசித்தார்.

கடைசியாக சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் இந்த கதையை கேட்டுவிட்டு சென்று தைரியமாக பண்ணு காலம் காலமாக எனக்கு தங்கச்சி சென்டிமென்ட் தான் கை கொடுத்திருக்கிறது அதேபோல உனக்கும் கண்டிப்பாக செட் ஆகும் என சொன்னாராம் அதன் பிறகு தான் சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது.