நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வெந்து தனித்தது காடு. இந்த திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் ஆனால் யாரயும் தனிப்பட்ட மனிதனையும் அவனுடைய உருவத்தையும் பார்த்து விமர்சனம் செய்வது மிகவும் தப்பு என சிம்பு அவர்கள் தெரிவித்து இருந்தார்.
ஏனென்றால் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வந்தாலும் ப்ளு சட்டை மாறன் போன்ற விமர்சனகர்கள் இந்த படத்தை மிகவும் தரகுறைவாக விமர்சித்துள்ளனர். அதிலும் வீணா போனவன் டான் ஆன கதைன்னு சொல்லி விமர்சித்து இருப்பார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தீ இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள், படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தினம் அனைவரும் நன்றாக தூங்கி விட்டு படத்தை பாருங்கள் என்று கூறியிருந்தார். அவர் அப்படி சொல்லும் போது கருகுற வாடை அடித்ததாக ப்ளு சட்டை மாறன் அவரை கிண்டல் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கௌதம் மேனனை வாய்ஸ் ஓவர் பைத்தியம் கௌதம் மேனன் என்று அவரை தரகுறைவாக பேசி இருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் இப்படி தரகுறைவாக பேசிய விமர்சனத்திற்கு வெந்து தணிந்தது காடு படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குனர் கௌதம் மேனனும் நடிகர் சிம்புவும் பதிலடி கொடுத்தனர். மேலும் இன்னொருத்தர் பொழப்பில் மண்ணு அள்ளி போடுறதுதான் விமர்சனங்களா என பலமுறை யோசித்தது உண்டு என்று இயக்குனர் கௌதம் மேனனும் மறைமுகமாக பேசினர்.
மேலும் நடிகர் சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சனங்களால் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் தனிப்பட்ட மனிதனையும் அவனுடைய உருவத்தையும் விமர்சனம் செய்வது மிகவும் தவறானது. என்னால ஈசியாக எடுத்துக் கொள்ள முடியும் ஆனால் மற்றவர்கள் இதுபோன்று எடுத்துக் கொள்வார்களா என்பது எனக்கு தெரியாது. மேலும் தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம் இது நான் வேண்டுதலாக வைத்திருக்கிறேன் என்று ப்ளு சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்தார் நடிகர் சிம்பு.