சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
மேலும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம் இதனை தொடர்ந்து சிம்புவின் ஈஸ்வரன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது என பல தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிம்பு ஒரு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் ஹன்சிகாதான் சிம்புவும் ஹன்சிகாவும் ஒரு காலத்தில் காதலித்து வந்தார்கள் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரண்டு பேருமே இணைந்து நடித்த திரைப்படம் தான் மஹா இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் காதலித்தபோது பார்ட்டியில் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.