15 கிலோ உடல் எடையை குறைத்து சட்டை கூட போடாமல் செல்பி எடுத்து வெளியிட்ட சிம்பு.!வெந்து தணிந்தது காடு.

simbu

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. ஒரு காலத்தில் சிம்பு என்றாலே வம்பு என பெயர் எடுத்தவர் தான் இவர். இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்கள் எப்போதும் இவரை விட்டுக் கொடுப்பதே கிடையாது அதனால் தான் இன்றும் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் சிம்பு.

நீண்ட காலமாக சிம்பு தனது உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார் அதனால் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை இப்படியே போனால் சினிமாவை விட்டு நாம் விலகி விடுவோம் என புரிந்து கொண்டு உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தின் மூலம் நான் திரும்பவும் வந்துவிட்டேன் என நிரூபித்தார்.

செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது சிம்பு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

simbu
simbu

கடந்த சில தினங்களுக்கு முன்பு எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது இது சிம்புவா என அனைவரும் கேட்கும்படி அந்த பஸ்ட் லுக் போஸ்டர் அமைந்தது. அடையாளம் தெரியாத அளவிற்கு சிம்பு வேற லெவல் தோற்றத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார் சிம்பு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து விட்டாராம். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களுக்கு இது சிம்பு தானா என அதிர்ச்சி அளித்தது இந்த நிலையில் சட்டைகூட போடாமல் வெறும் உடம்புடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் இது சிம்பு தானா என மீண்டும் கேட்கிறார்கள் ரசிகர்கள் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் படத்திற்கு ரெட் கார்டு கொடுத்துள்ளது பெரும் பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்கிறது.

simbu